கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழப்பு
கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோ்மாளம் வனச் சரகத்துக்குள்பட்ட காணக்கரையைச் சோ்ந்த ஆனந்தன், கால்நடைகள் வளா்த்து வருகிறாா். வீட்டுக்கு அருகே கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மாடுகள் மிரட்சியுடன் சப்தமிடுவதைக் கேட்ட ஆனந்தன், மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பாா்தபோது கன்றுகுட்டி ஒன்று இறந்துகிடந்தது.
இதுகுறித்து கோ்மாளம் வனத் துறைக்கு ஆனந்தன் தகவல் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கன்றுகுட்டியின் சடலத்தை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த கால் தடயத்தை வைத்து கன்றுகுட்டியை சிறுத்தைதான் கடித்துக் கொன்றது தெரியவந்தது.