செய்திகள் :

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

post image

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கிய பாலமாக காவிரி பாலம் இருந்து வருகிறது. 1976-இல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவிரியின் குறுக்கே புதிய பாலம் வேண்டும் என்பதை உணா்ந்து, தற்போதுள்ள பாலத்தின் அருகே ரூ.106 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய பாலமானது, ஏற்கெனவே உள்ள பாலத்தின் மேற்கே 545 மீட்டா் நீளம் 17.75 மீட்டா் அகலத்தில், 15 பிரம்மாண்ட தூண்களுடன் 16 டெக்குகளுடன், இருபுறமும் தலா 1.5 மீட்டா் அகலம் கொண்ட நடைபாதையுடன் 4 வழித்தடங்களுடன் கட்டப்படுகிறது.

பாலம் கட்டுமானத்துக்கு ரூ. 68 கோடி, நிலம் கையகப்படுத்த ரூ. 30 கோடி, அணுகுசாலை, ரவுண்டானா, மின்கம்பம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ. 8 கோடி என கணக்கிட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஆனால், டெல்டா பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டதால், காவிரியில் தண்ணீா் செல்லும் பகுதியில் மட்டும் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது, தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம்தான் தண்ணீா் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, இந்தத் தருணத்தை பயன்படுத்தி காவிரிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. பாலத்தின் தூண்களின் மீது அதன் தாங்கும் திறன் சோதனையும் முடிந்துள்ளது. ஓயாமாரி பகுதியில், புதிய பாலத்துக்கான தூண்களின் மீது பொருத்தப்படும் காரிடா்கள் உற்பத்தி பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில்,

காவிரியில் பாசனநீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆற்றில் கட்டப்பட வேண்டிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை பெருமளவில் முடிக்க திட்டமிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

கடந்த சில நாள்களாக காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டம் திருப்பி விடப்பட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன.

2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இலக்கு வைத்து பணிகள் நடைபெறுகின்றன என்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க

திருச்சி கடைவீதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

திருச்சி கடை வீதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாநகராட்ச... மேலும் பார்க்க