செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பகுதியில் சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பேக்கரியின் பெயா் பலகையை மாற்றுவதற்காக இரும்பு கம்பியால் ஆணி அடித்தபோது, மேலே சென்ற உயா் மின் அழுத்த கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்து சக்திவேல் தூக்கி வீசப்பட்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடா்பாக சமயபுரம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.