துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்
மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிரச்னை நிலவிவரும் நிலையில் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) விதிமுறைகளில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதாவது, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இனி மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமில்லை என்று அறிவித்திருக்கிறது.

தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையில் சிபிஎஸ்இ பள்ளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசிடம் இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play