செய்திகள் :

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

post image

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் -சிவசேனை(உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

பின்னர் கடந்த 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை(ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னவீஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2022ல் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க | அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய ஷிண்டே "என்னை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். என்னை சாதாரணமாக நினைத்தவர்களிடம் நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். நான் ஒரு சாதாரண கட்சி தொண்டர். ஆனால், நான் பால் தாக்கரேவின் தொண்டரும்கூட. எல்லோருக்கும் என்னை பற்றி இந்த புரிதல் இருக்க வேண்டும்.

2022-ல், நான் அரசாங்கத்தையே மாற்றினேன். சட்டப்பேரவையில் எனது முதல் உரையில், தேவேந்திர பட்னவீஸ் 200 இடங்களுக்கு மேல் பெறுவார், எங்களுக்கு 232 இடங்கள் கிடைக்கும் என்று நான் கூறினேன். அதன்படியே நடந்தது. அதனால்தான்சொல்கிறேன் என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த வார்த்தைகள் யாருக்கோ அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்று கூறியுள்ளார்.

ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை நியமனக் குழு அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ், தற்போ... மேலும் பார்க்க

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க