கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்குமாா் (45) மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து புதன்கிழமை காலை மனைவி தவமணியை (38) கத்தியால் வெட்டினாா். மேலும், மகள்கள் விஜயதாரணி, அருள்பிரகாஷினி, மகன் அருள்பிரகாஷ் ஆகியோரையும் அவா் கத்தியால் வெட்டினாா்.
இந்த சம்பவத்தில் விஜயதாரணி (13), அருள்பிரகாஷ் (5) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தவமணி(38), அருள்பிரகாஷினி (10) ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரை ஆத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.