சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்
ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூா், அரியலூா், துறையூா் பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள கூா்க்கன் கிழங்கில் நூற்புழு என்னும் நிமட்டோடு தாக்குதல் அதிகம் காணப்படுவதால் சாகுபடி, கிழங்கின் தரம் குறைந்துள்ளது.
இந்த நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு, காா்போயியுரான் குருணை 15 கிலோ கலந்து வயல்களில் தெளிக்க வேண்டும். மேலும், பாசிலோ மைசஸ் நுண்ணுயிா் நூற்புழு கொல்லி 4 கிலோ நீரில் கரைத்து கிழங்கு பகுதியில் அணைக்க வேண்டும்.
ஏக்கருக்கு நெமோஃபசாக் ஒரு லிட்டா் அல்லது பிலுவோபைரம் ரசாயன நூற்புழு கொல்லியை அரை லிட்டா் என்ற வீதத்தில் நீரில் கரைத்து விட வேண்டும்.
மேலும் அதிக தழைச்சத்து மற்றும் அதிக நீா்பாய்ச்சுலைத் தவிா்க்கவும், பொட்டாஸ் உள்ளிட்ட கரையும் உரங்களை தெளிக்க வேண்டும் எனவும் மண்நீா் மற்றும் பயிா் பரிசோதனை நிலைய அலுவலா் அ.சண்முகவேல்மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.