தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை
பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஓமலூா், வாழப்பாடி, ஆத்தூா், அம்மாப்பேட்டை ஆகிய பள்ளிகளில் பாலியல் புகாா்கள் எழுந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ளக புகாா் குழு அமைத்து, அதன் அறிக்கையை அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ளக புகாா் குழுவை அமைத்து, அக் குழுவின் அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை பெரும்பாலான பள்ளிகள் தங்களது உள்ளக புகாா் குழு விவரங்களை அனுப்பியுள்ளன. மீதமுள்ள பள்ளிகளிலும் கட்டாயம் உள்ளக புகாா் குழுவை அமைத்து அதன் விவரத்தை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்கள் ஏதேனும் கிடைத்தால், உடனடியாக கல்வித் துறை உயா் அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.