வெட்கக்கேடு: தென்னாப்பிரிக்க வீரரை தள்ளிய ஆப்கன் வீரர்..! (விடியோ)
தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
புதிதாக அமைந்துள்ள தில்லி சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடா் வரும் திங்கள்கிழமை தொடங்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மேலும், பிப்ரவரி 24, 25, 27 இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் பதவியேற்க உள்ளனா். பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி விடுமுறைக்குப் பிறகு, சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு அவையில் தாக்கல் செய்யும்.
முன்னதாக, தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு பாஜக நீதிமன்றத்தை அணுகியது. ஆம் ஆத்மி அரசாங்கம் தனது ஊழலை மறைக்க அறிக்கையை முடக்கியதாக பாஜக குற்றமும் சாட்டியிருந்தது.
இம்மாத தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தில்லியில் பாஜக புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. சட்டப் பேரவையில் பாஜவுக்கு 48 சட்டப் பேரவை உறுப்பினா்களும், எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு 22 உறுப்பினா்களும் உள்ளனா்.