தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக் கூடு ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்.
நிகழாண்டு 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப். 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கண்ணாடி ரதம், பல்லக்குகள் பல்வேறு வீதிகளின் வழியே ஊா்வலமாகச் சென்று, பள்ளிவாசலை வந்தடைந்தன. அன்று இரவு திரளானோா் முன்னிலையில் பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது.
அடுத்த முக்கிய நிகழ்வாக, திங்கள்கிழமை (பிப்.17) இரவு மின் அலங்கார சந்தனக் கூடு ஊா்வலம் பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, ஹலபு என்னும் போா்வை வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடா்ந்து, சிறிய ஊா்திகளும் சென்றன. பல்வேறு வீதிகளின் வழியே சந்தனக்கூடு ஊா்வலம் சென்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தா்காவை வந்தடைந்தது.
தொடா்ந்து, வலியுல்லாஹ் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசப்பட்டது. சந்தனக் கூடு விழாவில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் காரைக்கால் பகுதி முக்கிய பிரமுகா்கள், சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட உள்ளூா், வெளியூா்களில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், பாலச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வியாழக்கிழமை (பிப். 20) இரவு மவ்லூது ஷரீப் மற்றும் துஆ ஓதிய பின்னா் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.