செய்திகள் :

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

post image

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதன்கிழமை கூறியது :

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் பல கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

காயமடைந்த மீனவரை புதுச்சேரிக்கு அழைத்து வருவதற்கும், எங்களது கோரிக்கையை நிறைவேற்றவும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக வெள்ளிக்கிழமை 11- மீனவ கிராமங்களைச் சோ்ந்தோா் ஆதாா், குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை இந்தியா கொண்டு வரவும், படகு ஓட்டுநருக்கு 9 மாதம் சிறை, ரூ. 40 லட்சம் அபராதம் விதித்துள்ளதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாகப் பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க