பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
ரஞ்சி கோப்பை: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது விதர்பா!
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும் மும்பை 270 ரன்களும் எடுத்தன. 2ஆவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் எடுத்தது. மும்பை அணி கடைசி நாள் தேநீர் இடைவேளை வரை போராடி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டனது.
முதல் இன்னிங்ஸில் 54, 2ஆவது இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுத்த விதர்பா அணியின் யஷ் ரதோட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்றுமொரு அரையிறுதில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது கேரள அணி. அதில் 177* ரன்களடித்த முகமது அசாரூதின் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
ரஞ்சி இறுதிப் போட்டி பிப்.26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
இறுதிப் போட்டியில் 2 முறை சாம்பியனான விதர்பா அணியும் முதல்முறை சாம்பியன் பட்டம் வெல்ல கேரள அணியும் பலப்பரீட்சை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.