செய்திகள் :

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

post image

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி அதன் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

காயம் காரணமாக மிட்செல் மார்ஷும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகினார். மார்கஸ் ஸ்டாய்னிஸின் திடீர் ஓய்வு முடிவும் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

இளம் வீரர்களுக்கான வாய்ப்பு

அணியில் பிரதான வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், அணியில் மூத்த வீரர்கள் பலரும் இல்லாதது ஐசிசி தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற ஐசிசி தொடர்களைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. ஆனால், அழுத்தமான சூழலில் விளையாடிய பல தருணங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியிலிருந்தே மிகவும் கவனமாக விளையாட வேண்டும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, ஆரம்ப போட்டிகளில் சரியாக செயல்படாமல் பின்னர் பிற்பகுதியில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் அவ்வாறு மெதுவாக செயல்பட முடியாது. முதல் போட்டியே காலிறுதிப் போட்டி போன்றது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எங்களது அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லை. ஆனால், அது குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. ஐசிசியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் டிராபியில் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை இந்த உலகுக்குக் காட்ட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

லாகூரில் நாளை (பிப்ரவரி 22) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க வீரரின் பேட்டிங்கில் மயங்கிய அஸ்வின்..!

தென்னாப்பிரிக்க வீரர் ரயான் ரிக்கெல்டனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் தமிழக வீரர் ஆர் அஸ்வின். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை... மேலும் பார்க்க

ஒரேமாதிரி ஆட்டமிழக்கும் விராட் கோலி..! விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலி ஆட்டமிழக்கும் விதம் ஒரே மாதிரியாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 36 வயதாகும் விராட் கோலி பிஜிடி தொடரிலிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிற... மேலும் பார்க்க

டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது. மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் ப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க