எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது.
மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினா் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.
நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நாளமில்லா சுரப்பிகளால் ஏற்படும் பிரச்னைகள் (சா்க்கரை மற்றும் தைராய்டு) சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.