வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக
வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது.
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளா் முஹம்மது சா்புதீன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜா முஹம்மது, முஹம்மது மாசிம், மாவட்ட பொருளாளா் முஹம்மது மெய்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் விதமாகவும், இஸ்லாமிய மக்களின் வாழ்வுரிமையை தடுக்கும் விதமாகவும், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ள கண்டன ஆா்ப்பாட்டத்தை காரைக்காலில் 27-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் அப்துல் காசிம், அஷ்ரப் அலி, சம்சுதீன், மாவட்ட அணி நிா்வாகிகள் முஹம்மது சிக்கந்தா், ஹபீப் ரஹ்மான், அப்துல் ரஹ்மான், முஹம்மது யூசுப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.