செய்திகள் :

மினசோட்டாவில் ஒலித்த இராசேந்திரச் சோழன் வசனம் - பாராட்டுக்களைப் பெற்ற நவீன நாடகம் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியில் அமெரிக்கா, மினசோட்டாவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், நடத்திய சங்கமம் பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக மாவீரன் இராசேந்திரச் சோழன் என்ற வரலாற்று நாடகத்தை அரங்கேறியது.  எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் கங்காபுரம் என்ற நாவலைக் கொண்டு, பேராசிரியர் முனைவர் ராஜு அவர்கள் எழுத்து, இயக்கத்தில் நவீன நாடகமாக வடிவமைத்திருந்தார். 

இந்நாடகத்தில், இராசேந்திரச் சோழனுக்கு குடும்பச் சூழலின் காரணமாக காலம் தாழ்த்தி இளவரசனாக முடிசூட்டப்பட்டதும், தந்தையின் பெருமையின் நிழலில் இருந்து அவர் விடுபட, தலைநகரமான தஞ்சையில் இருந்து புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றிய பின்னும், ஏற்பட்ட மனப்போராட்டத்தையும் மையப்படுத்தி அனைத்து கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

அமெரிக்காவில் இராசேந்திரச் சோழன் நவீன நாடகம்

சுமார் 4 மாதங்களாக வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம், காட்சியின் தன்மை என்று அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இணைய வழியில், முனைவர் இராஜு அவர்களுடன் பயிற்சியைத் தொடங்கினோம். மேலும் உடல் மொழியில், உணர்வுகளைக் கொண்டு வரும் விதமாக 1 மாத நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்நாடகத்திற்கான உடை, அலங்காரப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து வாங்கியிருந்தோம். நிகழ்ச்சி நடத்தும் அரங்கில் கொடுக்கப்படும் பெரும்பாலான பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டோம். 8 அடி உயரமுடைய 6 தூண்களை நாங்களே தயாரித்தோம்.

ஒலி, ஒளி அமைப்பு, இதில் முக்கிய பங்காற்றும் விதமாக சில நுட்பமான உத்திகளைக் கொண்டு உருவாக்கினோம். மிகப் பிரமாண்டமான 18 காட்சிகளுடனும், பரதம், நாட்டுப்புற நடனம் என 5 பாடல்களுடனும் சுமார் 1 மணி 30 நிமிடத்திற்குப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது என்று சொன்னால் மிகையில்லை.

நாடகத்தில் நடித்த, நடனமிட்ட அனைவரும் மினசோட்டாவாழ் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே. அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவி செய்த அனைவருக்கும், நாடகத்தினை   ஒருங்கிணைக்க உதவிய திரு.சிவானந்தம், திரு.சுந்தரமூர்த்தி, திரு.செந்தில்குமார்,  திருமதி.ப்ரியா, திரு.சச்சிதானந்தன், திரு.வேல்முருகன் அவர்களுக்கும் நன்றி.

உலகின் பெரும் பகுதியை கட்டி ஆண்டு, புலிக்கொடியைப் பறக்கவிட்டு, தமிழர்களின் புகழை உலகறியச் செய்த இராசேந்திரச் சோழனின் வரலாற்றை, நாடகமாகவோ, அல்லது திரைப்படமாகவோ இதுவரை யாவரும் சாத்தியப்படுத்தியதில்லை.

அதுவும் நவீன நாடக வடிவில் முதல் முறையாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது, என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. சுமார் 50 பேர் பங்கு கொண்ட பிரமாண்டமான இப்படி ஒரு வரலாற்று நாடகத்தினை, விலையில்லா நுழைவுச் சீட்டுடன் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு, மினசோட்டாத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துகளையும், அனைத்து பார்வையாளர்கள், விருந்தினர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Switzerland: எண் 11 -ஐ அதிகம் விரும்பும் ஸ்விஸ் நகர மக்கள்... என்ன காரணம் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்தான் சோலோதர்ன். அழகிய நிலப்பரப்புகளை கொண்ட இந்த நகரம், 11 என்ற எண்ணின் மீதான ஈர்ப்பாலும் தனித்து நிற்கிறது.துல்லியமாக கணக்கிடப்பட்ட 11 தேவாலயங்கள், 11 அருங்... மேலும் பார்க்க

Kabilan: கவிஞர் கபிலன் வழங்கும் தூரிகை கவிதை விருது - விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பாடலாசிரியர் கபிலனின் தூரிகை அறக்கட்டளை இந்தாண்டுக்கான கவிதை விருது விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் 2024-ம் ஆண்டுக்கான தூரிகை கவிதை விருதை நடத்தவிருக்கிறது கபிலனின... மேலும் பார்க்க

விடை தேடிய பூ - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சங்க இலக்கியம் முதல் சோஷியல் மீடியா வரை... காலமெல்லாம் காதல்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவன்... அவள்... அது! - இறுதி நிமிடங்களின் வலி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் படைத்த சாதனைத் தமிழர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க