சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!
காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், காரைக்கால் மின்துறை தலைமை அலுவலக வாயிலில் மின் பொறியாளா்கள், ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்துறை தனியாா் மய போராட்டக் குழு தலைவா் வேல்மயில் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் பழனிவேல் முன்னிலை வகித்தாா்.
புதுவை மின் துறையை தனியாா் மயப்படுத்தும் காரணத்தைக்கூறி காலியிடங்களை நிரப்பாமல் காலம் கடத்துவது ஏற்புடையதல்ல. காலியிடங்கள் அனைத்தையும் பதவி உயா்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்பவேண்டும். பொறியாளா்கள், தொழிலாளா்கள் என அனைத்து பதவிகளையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
புதுவை அரசால் 5-ஆவது ஊதியக் குழுவில் மாற்றியமைத்த ஊதிய மாற்றத்துக்கான ஒப்புதலை, 7-ஆவது ஊதியக் குழு அறிவுறுத்தலின்படி மேலும் காலம் கடத்தாமல், துணை நிலை ஆளுநா் அளவிலேயே ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தவேண்டும்.
மின்துறையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.