பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை..! ரஞ்சி இறுதிப் போட்டியில் கேரளம்!
முதல்முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது கேரள அணி.
அரையிறுதியில் குஜராத், கேரள அணிகள் விளையாடின. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கேரள அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக முகமது அசாரூதீன் 177* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து விளையாடிய குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2ஆவது இன்னிங்ஸை விளையாடிவரும் கேரள அணி 46 ஓவர்களில் 114/4 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இது போட்டியின் கடைசி நாள் என்பதால் முதல் இன்னிங்ஸில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலைபெற்ற கேரளம் இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது கேரள அணி.
முதல்முறையாக ரஞ்சி கோப்பை இறுதியில் விளையாடவிருக்கும் இந்த அணியின் அசாரூதின் அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு அரையிறுதியில் மும்பை அணி வெற்றி பெற 89 ரன்கள் தேவை. 1 விக்கெட் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் மிகவும் சுவாரசியமாக ஆட்டம் சென்றுகொண்டுள்ளது.
A thriller in the semi-final! With just 1 wicket in hand, we edge ahead with a 2-run lead in the first innings!
— KCA (@KCAcricket) February 21, 2025
Courtesy: BCCI#RanjiTrophy#keralacricket#kcapic.twitter.com/H0wP6d3tGh
One step closer to the finals! We take a 2-run lead against Gujarat as the Semi-Final battle intensifies!#kca#keralacricket#ranjitrophy#keralacricketassociationpic.twitter.com/BOJOJ55aks
— KCA (@KCAcricket) February 21, 2025