செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!
2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள், கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், பூமாவில் உள்ள அவரது நாடாளுமன்ற இல்லத்தில் கட்சித் தொண்டர்கள் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினர். குறிப்பாகத் தலித்துகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தனர்.
ரேபரேலியில் உள்ள காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைவர் சுனில் குமார் கௌதம், சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு காந்தியை அவரது பூமாவில் சந்தித்ததாகக் கூறினார்.
பட்டியலின சமூகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து நாங்கள் டிவவாதித்தோம், மேலும் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தோம்.
நகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இது உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தொண்டர்களை ஊக்குவித்து, கட்சி அமைப்பை வலுப்படுத்தும் அதேநேரத்தில் 2027 தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸின் ரேபரேலி குழு துணைத் தலைவர் சர்வோத்தம் குமார் மிஸ்ரா, காந்தியின் தலைமையைப் பாராட்டினார், மேலும் அவரது நேர்மை, தொலைநோக்கு மற்றும் பணி நெறிமுறைகள் விவரிக்க முடியாதவை என்றும் அவர் கூறினார்.