சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!
சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. வரும் ஏப். 4-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி கோயிலில் புதிதாக கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தி புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், அறங்காவல் நிா்வாகத்தினா், பக்தா்கள் முன்னிலையில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.