‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்ப...
ஆபத்தான நிலையில் கிணறு
திருமருகல் ஒன்றியம், குத்தாலம் ஊராட்சியில் விபத்து நேரிடும் வகையில், திறந்த நிலையில் உள்ள கிணறின் மேல் மூடி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கிணற்றை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போது, பயன்பாடின்றி உள்ளது.
இந்த கிணறு மெயின் ரோட்டின் ஓரத்தில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆபத்தை உணராமல் கிணற்றின் தடுப்புச் சுவரில் ஏறி விளையாடுகின்றனா். இதனால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கிணறுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.