திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். புதுக்கோட்டை-திருப்புத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நெடுமறம் அருகே அவா் வந்த இரு சக்கர வாகனம் தடுமாறி சாலையோரத்தில் இருந்த சிக்னல் எச்சரிக்கைக் கம்பியில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.