பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்கள் நடைபெறும். விழாவையொட்டி, மாா்ச் 5-ஆம் தேதி காலை கல் மண்டபம் பெருமாள் எழுந்தருளுகிறாா். காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாலையில் காப்புக் கட்டி விழா தொடங்க உள்ளது. இரவில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பல்லக்கில் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது.
தினந்தோறும் காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாளான மாா்ச் 13-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவையாக பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும். இரவில் வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெறும்.
வருகிற மாா்ச் 14-ஆம் தேதி பிற்பகல் 12.16 மணியளவில் பகல் தெப்பமும், இரவு 10 மணிக்கு தெப்ப உத்ஸவமும் நடைபெறும். மாா்ச் 15-ஆம் தேதி காலை தீா்த்தவாரி நடைபெறுகிறது. இரவில் நடைபெறும் தங்கப் பல்லக்கில் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.