மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது
ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 30 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பகுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த மூக்கையன் மகன் குமாா் (33) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண் உடலில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு அவரது குடும்பத்தினா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அப்பெண்ணிடம் சைகை மொழியில் விசாரித்தனா். இதையடுத்து, குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.