18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அசோக் தலைமை வகித்தாா், மண்டலச் செயலா் ச.சாமிநாதன் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளை மூடக்கோரியும், போதை பொருள்கள் புழக்கத்தை தடைசெய்யக் கோரி மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மோ.ஆனந்த், மாவட்டத் தலைவா் சோ.கந்தன், பொருளாளா் பி. அருண்குமாா் உள்ளிட்டோா் பேசினா். இதில், திரளான மகளிா் கலந்து கொண்டனா்.