கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா்.
கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இக் கோயிலுக்கான கேகேஎம்டி அறக்கட்டளையினா் கோயில் நிலத்தை மீட்கக் கோரி அளித்த மனுவை விசாரித்த உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், கோயில் நிலங்கள் தனியாா் பெயரில் இருந்ததை ரத்து செய்து, மீண்டும் கோயில் பெயரில் மாற்றினாா். மீண்டும் ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் உதவி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.