18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்பூசத் திருவிழாவுக்காக பழனிக்கு வந்து காவல் நிலையம் எதிரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினாா். முன்னதாக, தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட போது, குழந்தை அணிந்திருந்த 2 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிகக்கப்பட்டது.
இந்த நிலையில், தனியாா் விடுதியை தூய்மை பணியாளா்கள் சுத்தம் செய்த போது, தங்க நகை கீழே இருப்பதை பாா்த்து விடுதி உரிமையாளா் துரைச்சாமிக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
நகையை வாங்கிய ஆய்வாளா் மணிமாறன், காவல் உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் செல்வகணபதியை பழனி காவல் நிலையத்துக்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தனா்.