செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு
கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167.25 கோடியில் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் விவேகானந்தன், மாநகராட்சி ஆணையா் மா. சிவகுரு பிரபாகரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கீத்குமாா் ஜெயின், துணை ஆணையா்கள் குமரேசன், சுல்தானா, மாநகர தலைமைப் பொறியாளா் முருகேசன், செயற்பொறியாளா் இளங்கோவன், உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, உதவி பொறியாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.