திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
லெக்கையன்கோட்டை ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி அருகில் கூடுதலாக 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கு ரூ.1.70 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணோலி காட்சி மூலம் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் விழாவில் மண்டல மேலாளா் எம்.பாலமுருகன், செயற்பொறியாளா் கே.ஆா்.முருகன், உதவி செயற்பொறியாளா் என்.ரவிச்சந்திரன், உதவி பொறியாளா் கே.சந்திரபோஸ், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் தி.மோகன், ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியக் கழக செயலா் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகம், லெக்கையன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.