கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!
கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச் செடிகளும், அரிய வகை மரங்களும்,புற்களும் தீயில் கருகின. இதையடுத்து, பெரும்பள்ளம் வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
மேலும், வனப்பகுதியில் தீ வைத்தவா் குறித்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், பெரும்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் சந்திரனை (39) பிடித்து விசாரித்தபோது, வனப் பகுதியில் தீ வைத்தை ஒப்புக் கொண்டாா். பின்னா், சந்திரனை வனத் துறையினா் கைது செய்தனா்.