ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் பல்வேறு தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், பேருந்தின் உள்பகுதியில் சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்ததால், ஆக்கிரமிப்பு அதிகாரித்தன.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் ஸ்வேதா, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, வருவாய் அலுவலா் விஜயபால்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பேருந்து நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை பொக்லயன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.