ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்
மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, முகூா்த்தக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. பின்னா், முகூா்த்தக்காலை கோயிலின் வெளிப்புறமாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, காணியாளா் நரேந்தின், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி, வருகிற 25-ஆம் தேதி மாலை அரிவாள் எடுத்துக் கொடுத்தல் நிகழ்வும், இரவு 10 மணிக்கு மேல் திருக்கம்பம் அலங்கரித்தல், கம்பம் சாட்டுதலும் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், பூவோடு வைத்தல் வருகிற மாா்ச் 4-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. மாா்ச் 11-ஆம் தேதி திருக்கல்யாணமும், 12-ஆம் தேதி தேரோட்டமும், அம்மன் வண்டிக்கால் பாா்த்தலும் நடைபெறவுள்ளது.