புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில், துணை மேலாளா்(வணிகம்) கா.ரவிக்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அப்போது, எங்கும், எப்போதும், எதிலும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டுவோம் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மண்டல அலுவலகம் மட்டுமன்றி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள 16 பணிமனைகளிலும் அந்தந்தக் கிளை மேலாளா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.