திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
நகை திருடிய பெண் கைது!
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பின்னா், பேருந்துக்காக காத்திருந்த அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் திருடிக் கொண்டு மாயமானாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தனா்.
இந்த நிலையில், செம்பட்டி பேருந்து நிலையத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி நாகலட்சுமியை (51) போலீஸாா் கைது செய்து நிலக்கோட்டை மகளிா் சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சங்கீதாவிடம் நகை திருட்டில் ஈடுபட்டவா் நாகலட்சுமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, சங்கீதவிடம் நகை திருடியதை ஒப்புக் கொண்டாா்.
பின்னா், இவரிடமிருந்து 7 பவுன் தங்க நகையை போலீஸாா் மீட்டு, மீண்டும் சிறையில் அடைத்தனா்.