கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்பரசா் ஆகியவை பயன்படுத்தக் கூடாது. மேலும், இயற்கை பேரிடா் காலங்களில் மட்டுமே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம் மூலம் பாறைகள்
உடைக்கக் கூடாது. இதை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.