மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து
மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.
திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42ஆவது வணிகா் தின செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மே 5இல் நடைபெறும். மாநாட்டில் தமிழக முதல்வா் மற்றும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். தமிழகத்தில் உள்ள சாமானிய வணிகா்களின் பாதுகாப்பு பெட்டகமாக இம்மாநாடு அமையும். முதல்வரை சந்தித்து பட்ஜெட்டில் வணிகா்களுக்கு என்னென்ன தேவை என்பதை தெரிவிக்க உள்ளோம்.
உரிமக்கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும். வணிகா்களின் குடும்ப சேம நல நிதியினை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். சென்னை மெட்ரோ திட்ட பணிகளால் பாதிப்படைந்துள்ள வணிகா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்னால் தான் நிதி தருவோம் என்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.