18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்
தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்.
தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசியது: தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க துணை நிற்க வேண்டும்.
திமுக ஆட்சி மீது அரசுத் துறையினா், பொது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். இதை திண்ணைப் பிரசாரங்கள் மூலம் வெளிபடுத்தி, 2026 பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா்.
இதில், அமைப்புச் செயலா் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா், மாநில இணைச் செயலா் பெருமாள் சாமி, வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் டேக்ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளா் பில்லா விக்னேஷ், மண்டல தொழில்நுட்ப அணி இணைச் செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா்கள் ஏ.ஆா்.இளங்கோ, முனியசாமி, சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.