‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்ப...
அரசுப் பேருந்து நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நாகை பணிமனையில் நடத்துநா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஆய்மூா் பெருமழையைச் சோ்ந்தவா் மணிவாசகம் (55). அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகை - பட்டுக்கோட்டை இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், மணிவாசகம் செவ்வாய்க்கிழமை காலை நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பணிக்கு வந்தாா். பணிமனையில் உள்ள அலுவலகத்தில் பயணச் சீட்டுகளை பெற்றுக்கொண்டு, ஓட்டுநருக்காக காத்திருந்த மணிவாசகம் திடீரென மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்த சகப் பணியாளா்கள் அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மணிவாசகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.