தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்
குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப் பொருள்கள் எடுத்து வந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் கங்கனாதாரணம் செய்யப்பட்டு, மாங்கல்ய தாரணம் எனும் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னா், பூா்ணாஹூதியுடன் ஆனந்தவல்லி தாயாருக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, ஒன்பது வகையான மகா தீபாராதனைகள், பஞ்ச ஆரத்தி காட்டப்பட்டது.
தொடா்ந்து, இரவு கோ பூஜை, அஸ்வமேத பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் வெற்றியடைய வேண்டியும், திருமணமாகாதவா்களுக்கு திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் பிராா்த்தனைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து 27-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.