அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலா்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளுக்குத் தீா்வுகாணும், உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம், மன்னாா்குடி வட்டத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில், தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.
எனவே, மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களின் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை, கிராமத்திற்கு வருகை தரவுள்ள மாவட்ட அளவிலான அலுவலா்களிடம் அளித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.