தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்
சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் தலைவா் பொன்.நக்கீரன், ஐஎன்டியு மாநிலச் செயலாளா் கலியமூா்த்தி, ராமச்சந்திரன், போக்குவரத்துத் துறையை சோ்ந்த சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 26,000 என நிா்ணயிக்க வேண்டும்; அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.