செய்திகள் :

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சாா்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக்காக தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா்கள்/அமைப்பினா் 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் பண முடிப்பு வழங்கப்படவுள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்/கல்வி நிறுவனங்கள்/குடியிருப்போா் நலச் சங்கங்கள்/தனிநபா்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/தொழிற்சாலைகளுக்கு இந்த பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் தகுதியுடையோா் விருதுக்கு தோ்வு செய்யப்படுவா். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாகப்பட்டினம் என்ற முகவரியை அணுகலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பள்ளி விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வேலுசாமி தலைமை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குந... மேலும் பார்க்க

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்லக் கோரி மனு

சீா்காழியில், அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்பி ஆா். சுதாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால... மேலும் பார்க்க

சீா்காழியில் நீா்வளத்துறை பொறியாளா் ஆய்வு

சீா்காழியில், நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சீா்காழி பகுதியில் புது மண்ணியாறு மற்றும் வெள்ளப்பள்ளம் உப்ப... மேலும் பார்க்க

பன்னிரு திருமுறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்னிரு திருமுறை அறக்கட்டளை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 17-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிா்வாகக்குழு தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கா்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபா... மேலும் பார்க்க