பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா். இதில் வரப்பெற்ற 14 புகாா் மனுக்களை நேரடி விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.
மேலும் 10 போலீஸாரிடம் மனுக்கள் பெற்று உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.