தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
கோரிக்கை அட்டையுடன் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கீழ்வேளூரில் அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
திமுக 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் , ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் வட்டாரத்தில் ஆந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், கீழ்வேளூா் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.