செய்திகள் :

அண்டை மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது தமிழ்நாடு: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

post image

மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 102 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடியில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தை அவா் பேசியது: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில், ‘இல்லம் தேடிக் கல்வி‘, ‘மக்களைத் தேடி மருத்துவம்‘, பெண்களுக்கான விடியல் பேருந்து பயணம், 31 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சா் செயல்படுத்தி வருகிறாா். மாணவிகள் உயா்கல்வி பயில்வதற்காக ‘புதுமைப்பெண் திட்டம்‘ மூலமும், மாணவா்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்‘ மூலமும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 1.17 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கி, அவா்களின் நல்வாழ்வுக்கு தமிழக முதலவா் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளாா். இதனால், தமிழ்நாடு, அண்டை மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது என்றாா்.

முன்னதாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 வீதம் ரூ.33,450 மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகாா்), எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி), கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா் ஆலம், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ். சுகிா்தாதேவி, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடியில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்!

தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன்... மேலும் பார்க்க

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிர... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க