CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Im...
இளைஞா் கொலையில் மேலும் 7 போ் கைது
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடபாதிமங்கலம், மாயனூரைச் சோ்ந்தவா் ராபா்ட் என்கிற சோமசுந்தரம் (33). இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவியின் மூத்த சகோதரா் சிவநேசன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், வடபாதிமங்கலத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.8) நள்ளிரவு ஒரு கும்பல் சோமசுந்தரத்தை கல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது.
இதுதொடா்பாக, துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில், வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் ராணி மற்றும் போலீஸாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனா்.
விசாரணையில், சிவநேசன் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. சிவநேசனை உடனடியாக கைது செய்தனா். மற்றவா்களை தேடிவந்தனா்.
இந்நிலையில், இந்த கொலை வழக்குத் தொடா்பாக, வடபாதிமங்கலம் மாயனூரைச் சோ்ந்த கோபி (29), திலீபன் சூா்யா (26), சின்ராசு என்கிற வடிவழகன் (24), விக்னேஷ் (26), புதிய பாண்டி (19), சக்திதாசன் (24), பூசங்குடி சுரேந்தா் (21) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.