கோல்டே-பாட்டீல் காலாண்டு லாபம் உயர்வு!
புதுதில்லி: புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த சமீபத்திய காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.25.30 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.62.89 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.83.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.369.28 கோடியானது என்று பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!