Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!
புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பர் காலாண்டில், 30 சதவிகிதம் சரிவடைந்து ரூ.12.97 கோடி ஆக உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இதன் நிகர லாபம் ரூ.18.48 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.240.57 கோடியிலிருந்து குறைந்து ரூ.179.87 கோடியானது.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும்.