சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு!
புதுதில்லி: உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லரை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 2024 ஜனவரியில் 5.1 சதவிகிதமாகவும் இருந்தது.
உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.02 சதவிகிதமாகவும், இது டிசம்பரில் 8.39 சதவிகிதமாகவும், கடந்த ஆண்டு 8.3 சதவிகிதமாகவும் இருந்தது.
சில்லறை பணவீக்கம் 4 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வர்த்தகப் போர் அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!