Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.
அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்ததினால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த பிப். 9 அன்று அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு பின்னர் அவரது கணவர் சோனிக்கும் அவர்களது மகளுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சாஜியை சோனிதான் அடித்து தாக்கியதாகவும், அவரது தலையை பிடித்து சுவற்றில் அடித்தப்போது அதனை தான் பார்த்ததாகவும், அவர்களது மகள் சேரத்தலா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையும் படிக்க: மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
மேலும், தனது தாயின் சிகிச்சை தடைப்படக்கூடும் என்பதினால் மருத்துவமனை அதிகாரிகளிடன் இதுகுறித்து அப்பெண் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த புகாரின் அடிப்படையில் இன்று (பிப்.12) சாஜியின் உடலை தோண்டியெடுத்த காவல் துறையின் அலப்புழா அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு சோதனைக்காகக் கொண்டு சென்றனர். மேலும், சோனியை காவலில் எடுத்த போலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.